வவுனியாவில் நேற்று இரவு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினர் போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது 750கிராம கேளரா கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் கஞ்சாவினைக்கடத்த முற்பட்ட நபர்கள் பயணம் மேற்கொண்ட காரினையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு நொச்சிமோட்டை பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையின்போது 750கிராம் கேரளா கஞ்சாவினை காரில் ஒன்றில் மறைத்து வைத்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து நொச்சியாகம நோக்கிச் சென்ற 31, 36வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயணித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றல் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.