(ப.பன்னீர்செல்வம்)

அனைத்து மாகாண சபைகளிலும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 20ஆம் திகதி புதன்கிழமை சந்திக்கின்றார்.

இச் சந்திப்புக்காக அனைவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இச் சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலை மற்றும் மே தினம் தொடர்பாகவும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்தோடு தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும் ஜனாதிபதி இச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.