ஈரானில் தற்போது கடும் மழை காரணமாக  அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்பமயமாதலால் ஏற்படும் திடீர் பருவநிலை மாறுபாடுகளால் தற்போது ஈரானில் கடும் மழை பெய்துவருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 19 நாட்களாக அங்குபெய்துவரும் மழையினால் இதுவரை 791 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக எமர்ஜென்ஸி மெடிக்கல் சர்வீஸஸ் தெரிவித்துள்ளது.

 இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.