பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் பிராவோ இன்றி களமிறங்கும் சென்னை

Published By: Digital Desk 4

06 Apr, 2019 | 03:50 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன

Image result for csk and kxip logo

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்  இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) வெற்றியை தனதாக்கியது. நான்காவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சு, களத்தடுப்புமோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் சென்னை பந்துவீச்சாளர்கள் 67 ஓட்டங்களை வாரி வழங்கியது பாதகமான அம்சமாக மாறியது.

சென்னை அணியில் ஷேன் வொட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு சிறப்பான நிலையில் இல்லாதிருப்புது, சென்னை அணிக்கு தலைவலியாக இருக்கிறது. எனவே அவருக்கு பதிலாக உள்ளூர் வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட வெய்ன் பிராவோ 2 வார காலம் விளையாடமாட்டார் என்று சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்ஹஸ்சி நேற்று  தெரிவித்தார். 

சகலதுறை வீரரான  வெய்ன் பிராவோ இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குஜ்ஜெலின் களம் இறங்குவார் என்று தெரிகிறது.

இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் விளையாடும் 3-வது போட்டி இதுவாகும். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முந்தைய 2 லீக் ஆட்டங்களிலும் வீரர்கள் ஓட்டமெடுக்க திணறினர். இருப்பினும் சென்னை அணி சிறப்பாக செயற்பட்டு 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி (ராஜஸ்தான், மும்பை, டெல்லி அணிக்கு எதிராக), ஒரு தோல்வி (கொல்கத்தா அணியிடம்) கண்டுள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் முதுகுவலி காரணமாக விளையாடாத பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உடல் தகுதியை பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புகிறார். இதே போல் ‘ஹெட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இளம் சகலதுறை வீரர் சேம் குர்ரன் இன்றைய ஆட்டத்திலும் தொடருவார் என்று தெரிகிறது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். இரு அணியிலும் முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன் இரண்டு அணியிலும் அதிரடி காட்டக்கூடிய துடுப்பாட்ட வீரர்ளும் இருக்கிறார்கள். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 ஆட்டத்திலும், பஞ்சாப் அணி 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்த போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

சென்னை: டோனி (தலைவர்), ஷேன் வொட்சன் அல்லது பொப் டுபிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு அல்லது முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஸ்காட் குஜ்ஜெலின், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், மொகித் ஷர்மா, இம்ரான் தாஹிர்.

பஞ்சாப்: ஆர்.அஸ்வின் (தலைவர்), கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர், மன்தீப் சிங், ஹர்டஸ் வில்ஜோன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, சேம் குர்ரன் அல்லது முஜீப் ரகுமான்.

அத்தோடு ஐதராபாத்தில், இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 

மும்பை அணி 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. 

ஓட்டக்  குவிப்பில் மிரட்டி வரும் ஐதராபாத் அணி உள்ளூரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35