நுவரெலியாவில் ஏப்ரல் வசந்தகாலம் கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வசந்த கால நிகழ்வையொட்டி சர்வதேச ரீதியிலான சாதனையாளர்களை உருவாக்கும் EVERESTING IN SRILANKA 2019 எனும் சைக்கிள் ஓட்டப்போட்டி 06.இன்று மதியம் 12 மணியளவில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
8848 மீற்றர் தூரமான பகுதியை நானுஓயா தொடக்கம் ரதல்ல சந்தி வரையும் மேழும், கீழுமாக 24 மணி நேரங்கள் சைக்கிள் மிதித்து ஓட வேண்டும் என்ற விதிமுறைக்கு அமைவாக இப்போட்டியை GO CEILAO TRAVEL COMPANY ஏற்பாட்டில் நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலின் அனுசரணையுடன் நடத்தப்பட்டது.
GO CEILAO TRAVEL COMPANY யின் முகாமையாளர் அமலி குணவர்தன, நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலின் முகாமையாளர் மற்றும் அதிகாரிகள், நுவரெலியா மாநகர சபை மேயர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் இடம்பெற்ற ஆரம்பமான இந்த போட்டியில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியினை நடத்துவதையொட்டி காலை 10 மணி முதல் நுவரெலியா நானுஓயா குறுக்கு வழியூடாக தலவாக்கலையை நோக்கி செல்லும் பிரதான வீதி மூட்டப்பட்டது. இதனால் இவ்வீதி வழியான போக்குவரத்தை நானுஓயா தொடக்கம் ரதல்ல சந்தி வழியாக செல்லும் டெஸ்போட் சுற்றுவட்டப்பாதையை பாவிக்க பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே பயனிகளுக்கோ அல்லது வாகன சாரதிகளுக்கோ முன் அறிவித்தல் விடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அதே தருணத்தில் இப்போட்டியினையொட்டி மாற்று வீதியாக டெஸ்போட் சுற்றுவட்டப்பாதையை தற்போது பயன்படுத்தி வரும் வாகன சாரதிகள் நாளை மதியம் 1 மணி வரை தொடர்ந்தும் பாவனைக்குட்படுத்தவும் பொலிஸாரால் பணிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க நானுஓயா தொடக்கம் டெஸ்போட் வழியான பிரதான வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகலப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அவ்வீதியினூடான போக்குவரத்தில் கனரக வாகனங்களும், நீட்டம் கொண்ட கனரக வாகனங்களும் பாரிய இட நெரிசல்களுக்கு உள்ளாகுவதை அங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.
அதே நேரத்தில் இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் பாதுகாக்கும் கடமையினை நானுஓயா மற்றும் நுவரெலியா பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாரிய நெரிசல்களுக்கு மத்தியில் சுற்றுவட்டபாதையில் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணிப்பதையும், காணக்கூடியதாக உள்ளது.
நுவரெலியாவில் முதல்முறையாக 24 மணி நேரங்கள் ஒரு பிரதான வீதியினை மூடி இவ்வாறான ஒரு போட்டி நிகழ்வினை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM