மனைவிகளை பரிமாற்றிக்கொண்ட நண்பர்கள்

By Daya

06 Apr, 2019 | 03:03 PM
image

இந்தியாவில் மனைவியை  பரிமாற்றி கொள்ளும் கணவர்களின் குழுவில் சிக்கிய பெண் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் ஹகமதாபாத்தை சேர்ந்த நீல். இவருக்கும் நேஹா என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி ஆறு மாதங்களில் நேஹா கணவரின் நடத்தை அறிந்துகொண்டார். 

 அதாவது, நண்பர்கள் அவர்களின் மனைவி ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி மாற்றி கொள்வார்கள் எனவும் அதே போல நீயும் இருக்க வேண்டும் எனவும் நேஹாவிடம் நீல் தெரிவித்துள்ளார். 

ஆனால் இதற்கு நேஹா ஒப்பு கொள்ளவில்லை, இதனால் தொடர்ந்து அவரை நீல் கொடுமைப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நீல் - நேஹா தம்பதி குல்லு மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு நீலின் நண்பர்கள் குழு மற்றும் அவர்களின் மனைவிகள் என 18 பேர் வந்திருந்தனர்.

இதையடுத்து நேஹாவை வேறு நபருடன் இருக்க நீல் வற்புறுத்திய நிலையில் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் நேஹாவுக்கு அங்கிருந்த ஒரு பெண் போதை மருந்துகளை கொடுத்து ஆபாச வீடியோ எடுத்துள்ளார்.

குறித்த வீடியோவை காட்டியே அந்த கும்பல் நேஹாவை மிரட்டி வந்தனர்.

ஆனால் நேஹா தொடர்ந்து அவர்கள் விருப்பத்துக்கு மறுத்த நிலையில் அவருக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி நீல் அவரை வீட்டை விட்டு வெளியில் துரத்தியுள்ளார்.

சமீபத்தில் நேஹா பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நீல் மற்றும் அவர் நண்பர்கள் நேஹா பெயரில் வாட்ஸ் அப் குழுவை தொடங்கி நேஹா குறித்து தவறாக பேசி வந்தனர்.

இதையடுத்து நேஹா பொலிஸாருக்கு  தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் செய்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right