செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான போபாஸ் படிப்படியாக அழிந்து வருவதாக அமெரிக்காவின் பெர்கிலி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மாணவர்களான பெஞ்சமின் பிளாக் மற்றும் துஷ்கர் மிட்டல் ஆகியோர் கணித்துள்ளனர்.


செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனாக விளங்கும் போபாஸ் சூரிய குடும்பத்தில் உள்ள எந்தவொரு சந்திரனைக் காட்டிலும் அருகாமையில் உள்ளது. 
செவ்வாய் கிரகத்துக்கும் போபாஸ{க்கும் உள்ள இடைவெளி மூவாயிரத்து எழுநூறு மைல் ஆகும். செவ்வாயின் ஈர்ப்பு விசையால் போபாஸ் சிறிது சிறிதாக இழுக்கப்பட்டு வருவதால், இது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து அழிய காரணமாகியுள்ளது என தெரியவந்துள்ளது.
ஆகவே, போபாஸ் இன்னும் 3 கோடியிலிருந்து 5 கோடி ஆண்டுகளுக்குள் முழுவதுமாக அழிந்து போகும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில், ஜுபிடர் போன்ற கிரகங்களை சுற்றியிருக்கும் வளையம் போல செவ்வாய் கிரகத்தை சுற்றி இதன் துகள்கள் படரும் எனவும் ஏற்கனவே, கணிக்கப்பட்டதை விட போபாஸின் அழிவு வேகமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.