சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் ஷெரின் காஞ்ச்வாலா என்ற விமான பணிப்பெண் நடிகையாக அறிமுகமாகிறார்.

இந்த வாய்ப்பு குறித்து நடிகை ஷெரீன் காஞ்ச்வாலா பேசுகையில், “நான் 18 வயதில் விமான பணிப்பெண்ணாக பணியாற்ற தொடங்கினேன். மூன்றாண்டுகளுக்குப் பிறகு பணியில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, அதிலிருந்து விலகி மொடலிங் துறையில் நுழைவதற்காக ஒரு போட்டோ ஷூட் நடத்தி, எம்முடைய அதிர்ஷ்டத்திற்காக காத்திருந்தேன். 

அப்பொழுது ஒரு நாள் இயக்குனர் நெல்சனிமிடருந்து அழைப்பு வந்தது. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா’ படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்க வேண்டும் என்றவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். தமிழ் மொழி தெரியாது. இருந்தாலும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இவ்விடயத்தில் உதவி இயக்குனர்கள் மற்றும் உடன் நடித்த ரியோ ராஜ் உள்ளிட்ட அனைவரும் உதவி புரிந்தார்கள்.

 படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பே நான் நடிக்கும் காட்சிகளுக்கான ஒத்திகையும் நடந்தது. அது எனக்கு நடிப்பதற்கு எளிதாக இருந்தது. தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், நான் நடித்த காட்சிகளை பார்த்துவிட்டு.‘ நன்றாக நடிக்கிறாய்’ என்று பாராட்டினார். நான் அதிலிருந்து மிகுந்த நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் , டிரைலர் என வரிசையாக வெளியாகி, மே மாத இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற நெடுநல்வாடை என்ற படத்தில் நடித்த நடிகை அஞ்சலி மேனன் கூட மும்பையில் பணியாற்றும் விமானப் பணிபெண் என்பது குறிப்பிடத்தக்கது.