தென்கொரியாவில் கங்குவான் மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

KANGWON ILBOKANGWON ILBO VIA GETTY IMAGES

தென்கொரியாவின் வடகிழக்கு பகுதியில் கங்குவான் மாகாணத்தின்  எல்லையையொட்டி அமைந்துள்ள கடற்கரை நகர பிரதேசத்தில் மின்மாற்றி ஒன்று வெடித்து சிதறியது.

மின்மாற்றி வெடித்து சிதறியதில் அருகிலுள்ள காடுகளில் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

அப்பகுதியில்  தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிட்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் குறித்த பகுதியல் தீ பரவல் காரணமாக ஒரவர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.