சிங்கள, தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படாது என தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வகையில் முகாமைத்துவம் செய்து இக்காலப்பகுதியில் அனைத்து பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக நீர் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றது. இதனால் தொடர்ச்சியாக சீரான அழுத்தத்துடன் நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.