கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலான பிரதேசத்தில் 05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.