பிரச்சினைக்குரிய தீவுப் பகுதியிலிருந்து சீனா தனது கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபகாலமாகவே தென்சீனக் கடல் பகுதியில் பிரச்சினைக்குரிய இடங்களில் சீனா அத்துமீறி நுழைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனாவுடன் பிலிப்பைன்ஸ் போர் செய்தால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரவிக்கையில்,

''நான் எந்தக் கோரிக்கையையும், பிச்சையையும் எடுக்கவில்லை. என்னிடம் இராணுவம் உள்ளது.  நீங்கள் தொட்டீர்கள் என்றால் இது வேறு கதையாகும். நான் எனது வீரர்களை தற்கொலைப் படை தாக்குதலுக்குத் தயாராகுமாறு கூறுவேன்'' என தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.