(வாஸ் கூஞ்ஞ)

தலைமன்னார் கிராமத்திலிருந்து கடலுக்கு படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் ஒரு மீனவரைக் காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் சார்ந்த இருவர் ஒரு படகின் மூலம் கடலுக்கு மீன்பிக்கச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதில் ஒருவர் படகுடன் இராமேஸ்வரத்துக்கு அண்மித்த இடத்தில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் இவருடன் சென்ற மற்றைய மீனவரைக் காணவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தை அறிந்து தலைமன்னார் மேற்கு கிராம மீனவர்கள் காணாமல்போன மீனவர் தொடர்பாக இரு தினங்களாக கடலில் தேடியபோதும் கண்டுபிடிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது 

காணாமல்போனவர் தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த ஜேனிஸ்ரன் என தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, குறித்த இருவரும் கடலுக்கு எதற்காக சென்றார்கள் என்ற விபரம் சரியாக தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.