இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ரசிகர்களின் ஆதரவைக் குவித்த இங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே தம்பதியின் சாதனையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே தம்பதியர் கடந்த செவ்வாய்க்கிழமை முதன் முதலில் தங்களுக்கான இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினர்.

தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கதைத் தொடங்கிய உடனேயே 1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர இணைந்தனர்.

" sussexroyal " என்ற இந்த அரச குடும்ப தம்பதியரின் இன்ஸ்டாகிராம் கணக்கு படைத்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகம் இச்சாதனையை ஏற்றுக்கொண்டுள்ளது.

மூன்று நாட்களில் தற்போது 3.8 மில்லியன் பேர் இந்த அரச குடும்பத்து தம்பதியரை பின் தொடர்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடத்தான் என இந்தத் தம்பதியர் என இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

இதேவேளை ஹரியும் மனைவியும் 33000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் செலவில் ஹம்சயரில் உள்ள ஹம்சயரில் உள்ள  ஹெக்பீல்ட் பிளேஸ் ஆடம்பர ஹோட்டலில் இருவரும் தற்போது தங்கியுள்ளனர். குறிப்பிட்ட ஹோட்டலுக்கு சர்வதேச அளவில் முக்கியமான பிரமுகர்கள் பலர் விரும்பிச்செல்வது குறிப்பிடத்தக்கது.