அறிமுக இயக்குனர் கே ஆர் சந்துரு இயக்கத்தில் தயாராகி வரும் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் நடிக்க, நடிகை மீரா மிதுன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன். அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து பிரபலமான இவர், தற்போது அறிமுக இயக்குனர் கே ஆர் சந்துரு இயக்கத்தில் தயாராகி வரும் ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில்,“ இந்தப்படத்தின் திரைக்கதை திரில்லர் பாணியில் அமைந்திருப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதில் என்னுடைய கதாபாத்திரம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இயக்குனர் சந்துரு குறும்படம் இயக்குனராக இருந்தாலும், திரைக்கதையை அற்புதமாக செதுக்கியிருக்கிறார் அதனால் தான் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன்.” என்றார்.
இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மும்பை மொடலிங் மங்கையும் ஒரு நாயகியாக நடிக்கிறார். கதையின் நாயகனான குறும்பட உலக புகழ் தீரஜ் நடிக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM