வவுனியா ஓமந்தை பறநட்டகல் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 40 நெல் மூட்டைகள் உட்பட வீட்டின் உடமைகளும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓமந்தை பறநட்டகல் பகுதியில் வசித்து வந்த ஒருவர் தனது கொட்டில் வீட்டில் வயலில் விளைந்த நெல் மூட்டைகளை பாதுகாத்து வைத்துள்ளார்.

நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றபோது மாலை திடீரென்று வீட்டில் தீ பற்றி எரிந்துகொண்டுள்ளது. இத்தகவலையடுத்து வீட்டிற்குச் சென்று அயலவர்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டபோதும் வீட்டிலுள்ள உபகரணங்கள் அலுமாரியிலுள்ள பொருட்கள் உட்பட வயலில் விளைந்த 40 நெல் மூட்டைகளும் எரிந்து நாசமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிசாருக்கு அளித்தவாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தீவிபத்திற்கு அருகிலுள்ள வயல்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் அத்தீபரவல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்