(செய்திப்பிரிவு)

தங்காலை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை தங்காலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  

குறித்த சந்தேநபரிடமிருந்து 5000 ரூபா நாணயத்தாள்கள் பத்தும், 500 ரூபா நாணயத்தாள்கள் ஐம்பதும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேகநபர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அவர், தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் மற்றும் வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தங்க ஆபரணக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.