உக்ரேனில் சர்க்கஸ்( circus) ஒன்றில் பார்வையாளர்கள் முன்னிலையில் சிங்கமொன்று தனது பயிற்றுவிப்பாளரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது
கிழக்கு உக்ரேனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ் என்ற நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஹமாடா கௌட்டா என்ற சர்க்கஸ் பயிற்றுவிப்பாளரையே சிங்கம் தாக்கியுள்ளது.
திடீர் என ஆக்ரோசத்துடன் பாயும் சிங்கம் தனது பயிற்றுவிப்பாளரை நிலத்தில் தள்ளிவீழ்த்தி தாக்குவதை வீடியோ காண்பித்துள்ளது
சிங்கம் அவரது கைகால் உடலின் பல பாகங்களை கடிக்க முயல்வதையும் காணமுடிகின்றது எனினும் பயிற்றுவிப்பாளர் துணி;ச்சலுடன் சிங்கத்தை எதிர்த்து போராடி அதனை பின்வாங்க செய்கின்றார்
தங்கள் கண்முன்னாள் இடம்பெறும் பயங்கரத்தை பார்த்து பார்வையாளர்கள் அலறுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.
சிங்கம் அவரை தாக்கியவேளை எனது இதயம் அச்சத்தால் இயங்கமறுத்தது என அரங்கிலிருந்த பெண்மணியொருவர் தெரிவித்துள்ளார்.
நான் வேறு ஒரு சிங்கத்தையே அழைத்தேன் ஆனால் இந்த சிங்கம் என்னை தாக்கியது என பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்
நான் அதனை தடுத்து நிறுத்தி சாந்தமாக்க முயற்சித்தேன் எனினும் அது செல்ல மறுத்தது என மேலும் தெரிவித்துள்ள அவர் நான் தவறுதலாக கீழே விழுந்தவேளை அந்த சிங்கம் என்னை கடிக்க முயன்றது ஆனால் அதிஸ்டவசமாக எனது கழுத்தை கடிக்க முயலவில்லை எனவும் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்
எனது கையிலும் காலிலும் உடலின் ஏனைய பகுதிகளிலும் சிங்கத்தின் கால் நகத்தின் அடையாளங்களும் அது கடித்த அடையாளங்களும் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அவ்வேளை பத்து சிங்கங்கள் காணப்பட்டன அவை அனைத்தும் உடனடியாக திரும்பிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அரங்கில் குழந்தைகள் சிறுவர்கள் இருந்ததன் காரணமாக நான் சிங்கங்களை அமைதியான முறையில் கையாண்டேன் என குறிப்பிட்டுள்ள பயிற்றுவிப்பாளர் புதிய இடத்திலிருந்து வந்தவுடன் சாகசங்களில் ஈடுபட பணிக்கப்பட்டதால் சிங்கங்கள் குழப்பமடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்
அவைகளிற்கு புதிய சூழலிற்கு பழகுவதற்கான அவகாசம் கிடைக்கவில்லை,இங்கு வந்தவுடன் அவை உடனடியாக சாகசங்களில் ஈடுபடவேண்டிய நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் சிங்கங்களும் மனிதர்களை போல மனோநிலை மாற்றங்களிற்கு உட்படுபவை எனவும் குறிப்பிட்டுள்ளார்
சிங்கத்தினால் தாக்கப்பட்ட காயம் உடம்பு முழுவதும் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் ஒவ்வொரு காயமும் முக்கியமானது என தெரிவித்துள்ளதுடன் மனிதர்களை விட விலங்குகளை நம்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்
ஒருவருடன் நீங்கள் நட்பாக பழகலாம் ஆனால் அவர் திடீர் என எதிரியாக மாறி முதுகில் குத்துவார் ஆனால் விலங்குகள் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை அதேவேளை ஒரு எல்லைக்கோடு உள்ளது அதனை கடந்தால் ஆபத்து எனவும் பயிற்றுவிப்பாளா தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM