மிகவும் சூட்சுமமான முறையில் மலவாயிலில் மறைத்து இலங்கையில் இருந்து  இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 8.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தது.

குறித்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 32 வயதுடைய மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வந்தது சென்னைக்கு திரும்பினர். 

குறித்த இருவரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களை சோதனையிட்டபோது இருவருடைய ஆசன வாயில் ரப்பர் ஸ்பொஞ்ச் போன்று தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

எனினும் குறித்த இருவரிடம் இருந்து பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 420 கிராம் எனவும்  இதன் மதிப்பு  ரூபா 14 இலட்சம்  எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளைமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.