பண்டிகை காலத்தை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரி இல்லாமல் மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து கட்டுநாயக்க விமான கடைத்தொகுதியில் அதிக விலைக்கு வியாபாரம் செய்வதாக தெரியவந்துள்ளது.

குறித்த விமானநிலையத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும், விமான நிலையத்தில் அத்தியவசியமான சேவைகளை வழங்கும் அரச அதிகாரிகளும் குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக 69 வகையான விஸ்க்கி போத்தல்கள், வரி அறவிடப்படாமல் ஒரு போத்தல் 3 ஆயிரத்து நூறு ரூபாவுக்கு கொள்ளவனவு செய்து பின்னர் விமான நிலைய கடைத்தொகுதியில் சுமார் 4 ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் குறித்த மதுபான போத்தல்களை வாகனங்களில் ஏற்றி சென்று இலங்கையின் பல்வேறு கடைத்தொகுதிகளில் தொகையாக விற்பனை செய்து வருவதாக விமானநிலையத்தில் பணியாற்றுவோர் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளளனர்.