டுபாயில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட நடிகர்  ரயன் வான் ரூயன்  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு விசாரணையின் பின்  வெலிகம பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த  நடிகர்  ரயன் வான் ரூயன் உட்பட ஐந்து பேர்  விமான நிலைய சுங்கப் பிரிவினர், தேசிய உளவுத் துறை மையம் ஊடாக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர். 

இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரும்  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து விஷேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 சுமார் 18 மணி நேர விசாரணையின் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர்  நடிகர்  ரயன் வான் ரூயனை வெலிகம பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.