70 வருடங்களை கடந்துவிட்ட நேட்டோ ; அடுத்தது என்ன?

Published By: Priyatharshan

05 Apr, 2019 | 05:13 AM
image

பெய்ஜிங் ( சின்ஹுவா ) - வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு (North Atlantic Treaty Organisation -- NATO  ) கடந்த வியாழக்கிழமை 70 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறது. நவீன வரலாற்றில் மிகவும் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒரு இராணுவ கூட்டணி என்ற வகையில் நேட்டோ சற்று நின்று நிதானமாக அதன் பாதை குறித்து சிந்திப்பதற்கான உகந்த  நேரம் இதுவாகும்.1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைக்கப்பட்டபோது  அன்றைய சோவியத் யூனியனுக்கும் அதன் சார்பு நாடுகளுக்கும் எதிரான ஒரு கூட்டு பாதுகாப்பு அமைப்பாக செயற்பட்டது.பனிப்போரின் ( Cold War ) முடிவையடுத்து அது அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இரு மருங்கிலும் உள்ள  நாடுகளுக்கிடையிலான இடையிலான ( Transatlantic) ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பாக தொடருகிறது.

பல தசாப்தங்களாக நேட்டோ பல்வேறு சவால்களுக்கு (1956 சுயெஸ் கால்வாய் நெருக்கடி தொடர்பாக எழுந்த உள் தகராறுகள் தொடக்கம் 1966 ஆம் ஆண்டில் நேட்டோவின் இராணுவக் கட்டளையில் இருந்து  பிரான்ஸின் வெளியேற்றம் வரை, 1880 களில் மூண்ட ஐரோப்பிய ஏவுகணை நெருக்கடி தொடக்கம் 1990 களில் பொஸ்னியா நெருக்கடி வரை ) பல்வேறு  முகங்கொடுத்திருக்கிறது.

இப்போது, பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் நேட்டோ இன்னமும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது.உண்மையில், அண்மைய ஹார்வாட் அறிக்கையொன்றில் நேட்டோவுக்கான முன்னாள அமெரிக்கப் பிரதிநிதிகளான டக்ளஸ் லூட்டும் நிக்கலஸ் பேர்ண்ஸும் குறிப்பிட்டதைப் போன்று " இந்த இராணுவக் கூட்டணி அதன் வரலாற்றில் மிகவும் அச்சுறுத்துகின்ற சிக்கலான சவால்கள் பலவற்றை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது." 

இத்தடவை மிகவும் குறிப்பிடத்தக்க சோதனை ஐயுறவு மனப்பான்மைகொண்ட வாஷிங்டனிடமிருந்தே வருகிறது. நேட்டோவுக்காக பெருமளவில் செலவுசெய்துகொண்டிருப்பதால் அமெரிக்கா கடுமையான நெருக்கடிக்குள்ளாகவேண்டியிருக்கிறது என்று கூறிக்கொண்டு தற்போதைய அமெரிக்க நிருவாகம்   ஐரோப்பிய நேச நாடுகள் பாதுகாப்புச் செலவினங்களை கடுமையாக அதிகரிப்பதற்கு நெருக்குதலைக் கொடுக்கும் ஒரு முயற்சியாக அந்த நாடுகளும் சுமையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று  உரக்கப்பேசுகின்றது. அமெரிக்காவின் இந்த அணுகுமுறை ஐரோப்பாவை விழிப்படையச்செய்தது." மற்றவர்கள் மீது நிபந்தனையின்றி தங்கியிருக்கக்கூடிய காலம் கடந்துபோய் விட்டது " என்று ஜேர்மன் அதிபர் அஞ்சலா மர்கெல் கூறல் இது தொடர்பில் கூறிய கருத்து கவனிக்கத்தக்கதாகும்

நேட்டோவின் உறுப்பு நாடுகள் மத்தியிலான வேறுபட்ட நலன்களும் இன்னொரு முக்கிய தடையாக இருக்கிறது. ஆரம்பத்தில் 12 நாடுகளைக் கொண்டிருந்த நேட்டோ 29 நாடுகளைக்கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.விரைவில் அதில் மெசடோனியாவும் இணைந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உறுப்புநாடுகளின் எண்ணிக்கை 30 ஆகலாம்.புவிசார் அரசியல் நிலக்காட்சி விரிவுபட்டுக்கொண்டிருப்பதால் பொதுவான இலக்குகளை நாடுவதும் மிகவும் கஷ்டமானதாகிப்போயிருக்கிறது. நேட்டோவின் கிழக்கு ஐரோப்பிய உறுப்பு நாடுகளைப் பொறுத்தவரை, ரஷ்யாவுக்கு எதிரான தடுப்பு வியூகத்தையே அதியுயர் முன்னுரிமைக்குரியதாக அவை நோக்குகின்ற அதேவேளை,  மற்றைய நாடுகள் தங்களுக்கு பெருமளவுக்கு பிரதிபலனைத் தராத விவகாரங்களில் கணிசமானளவு தேசிய வளங்களை முதலீடு செய்வது அவசியமானது என்று நோக்குவதாக இல்லை. 

சில முக்கிய ஐரோப்பிய நாடுகள் அவற்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த தொந்தரவான சூழ்நிலையில் இருந்தே நேட்டோவுக்கான மூன்றாவது சவால் தோன்றுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு நடைமுறைச்சாத்தியமான பாதையொன்றைக் கண்டுபிடிப்பதில் பிரிட்டன் கடும் முயற்சி செய்துகொண்டிருக்கின்ற அதேவேளை,  பிரான்ஸ் இரைச்சல்மிக்க மஞ்சள் அங்கி இயக்கத்தின் வடிவில் வளர்ந்துவரும்  ஜனரஞ்சக அரசியலை முறியடிக்கப் போராடிக்கொண்டிருக்கிறது.இந்த பிரச்சினைகளை எல்லாம் உகந்தமுறையில் நேட்டோ கையாளமுடியும் என்பதற்கான அறிகுறியை இதுவரை காணக்கூடியதாக இல்லை.

தொடக்கத்தில் இருந்ததைப் போன்று நேட்டோ அதன் கவனத்தை ரஷ்யாவை எதிர்ப்பதற்கான வியூகத்தின் மீது திருப்பியிருக்கும் ஒரு அச்சம் தருகின்ற போக்கை காணக்கூடியதாக இருக்கிறது. 

 2014 ஆம் ஆண்டில் கிறிமியாவை ரஷ்யா பலவந்தமாக இணைத்துக்கொண்டபிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் அணிசேருகை தீவிரமடைந்திருக்கிறது.அத்துடன் பெரு வல்லரசுகளுக்கிடையிலான மேலாதிக்க அரசியல்  போட்டி மீண்டும் உக்கிரமடையும் என்று பேசுவதையும் காண்கிறோம்.

ஆனால், மாஸ்கோவின் மிகவும் நெருக்கமான அயல்நாடுகளின் மத்தியில் நேட்டோவின் பிரசன்னம் ஆபத்தான எதிர்நடவடிக்கைகளைத் தூண்டிவிடக்கூடிய சாத்தியத்தைக் கொண்ட ஆத்திரமூட்டும் செயலாகவே நோக்கப்படும். நேட்டோ தனது நோக்கத்துக்கேற்ப எல்லாமே நடக்கும் என்ற நினைப்பில் நகர்வுகளைச் செய்வதாக பலரும் கருதுகிறார்கள்.

கடந்த 500 வருட காலத்தில் உலகில் இருந்த முக்கியமான இராணுவக் கூட்டணிகள் குறித்து ஆராய்ந்த புரூக்கிங்ஸ் அறிக்கையொன்று அவற்றில் 47 கூட்டணிகள் சுக்குநூறாகிப்போனதாக கண்டறிந்திருக்கிறது. நேட்டோ அதன் நீண்ட ஆயுளைக் கொண்டாடுகின்ற அதேவேளை, அதன் நோக்கத்தை மறுமதிப்பீடு செய்வதுடன் முன்னோக்கிய  பாதையையும் தெளிவுபடுத்தவேண்டும்.

பிராந்திய அளவிலோ அல்லது பரந்துபட்டதாக உலக அளவிலோ சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் கட்டியெழுப்புவதில் நேட்டோவுக்கு நாட்டமிருந்தால்,  பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற பெயரில் மற்றைய நாடுகளை ஆத்திரமூட்டவோ அல்லது பிரச்சினைகளின் ஒரு தோற்றுவாயாக மாறவோ கூடாது. பனிப்போர் யுக மரபிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டு  அபிவிருத்திக்கு ஆதரவான பல்தரப்பு அமைப்பாக நேட்டோ வடிவெடுப்பது நல்லதொரு சிந்தனையாக இருக்கமுடியும்.

( வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுக்களம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04