(எம்.மனோசித்ரா)

இலங்கையிலிருந்து கட்டாருக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படவிருந்த கஞ்சா பண்டாரநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இன்று காலை 11.25 இற்கு கட்டாருக்கு செல்லவிருந்த qr 665  என்ற விமானத்தினூடாக கட்டார் செல்லவிருந்த பிரயாணி ஒருவரிடமிருந்தே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த பிரயாணி கைது செய்யப்பட்டுள்ளதோடு ,அவர் புத்தளத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணப்பைக்குள் காணப்பட்ட உணவுப் பொதிகள் சிலவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை 1.8 கிலோ கிராம் நிறையுடைய 587000 ரூபாய் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.