2019 ஆம் ஆண்டில் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

 

கல்வி அமைச்சு சார்பாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்கவும் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சார்பாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேகா அலஸூம் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டனர்.

2018 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 30 ஆம் திகதி வரை சுரக்ஷா காப்புறுதியை செலுத்துவதற்கு அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்ததின் ஊடாக இணக்கம் தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் சுரக்ஷா காப்புறுதி வழங்கும் போது கிடைத்த அனுபவம் மற்றும் இனங்காணப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் அதிகளவிலான நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் இம்முறை சுரக்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.