(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி அதிக பயணிகளுடன் பயணித்த அதி கொகுசு தனியார் பஸ் வண்டி ஒன்று வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்துச் சம்பவம் நேற்று  இரவு சுமார் 10.15 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவத்தில் வீதியில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் வேன் மற்றும் பஸ் வண்டியில்; பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. குறித்த விபத்தில் மோதிய இரு வாகனங்களும் பலத்த  சேதத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த பெண், வீதியின் நடுவே  திடீரென குறுக்கிட்டதால் வேகமாக வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. இதனையடுத்து  பின்னால் வந்த பஸ் வேனுடன் மோதியுள்ளது.