இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்லூரி மாணவியான நீது(22) என்பவரே கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது நீதுவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடியுள்ளனர்.

இந்த நிலையில் நீதுவின் குடியிருப்பில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிதீஷ்(32) என்பவரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

காலை 7 மணி அளவில் கழிவறையில் சென்ற நீதுவை திட்டமிட்டு, குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த நிதீஷ் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இருச்சக்கரவாகனத்தில் நீதுவின் குடியிருப்புக்கு வந்த நிதீஷ், பின் வாசல் வழியாக குடியிருப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

திடீரென்று நீதுவின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக்கொண்டு அவரது குடியிருப்பின் அருகே ஒன்று கூடியுள்ளனர்.

இதனிடையே கழிவறையில் இருந்து நீதுவின் உடல் முழுவதும் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி நீதுவின் மார்பில் இரத்தக்காயம் இருந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த பொலிசார் நிதீஷை கைது செய்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை உறுதியாக தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.