(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறும் வரவுசெலவுத் திட்டத்தின் வாக்கெடுப்புக்கு எதிராக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவு திட்டம் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்குவதாக அமையவில்லை. இதன் காரணமாக மேற்கண்ட தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.