வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்தில் ஜீ வி பிரகாஷ் நடிக்கிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயமேன், ஜகஜ்ஜால கில்லாடி என பல படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் எழில், தற்போது பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார். 

இதில் கதையின் நாயகனாக ஜீ வி பிரகாஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஈஷா எப்பா நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் ‘ஓயீ ’என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இதனிடையே நடிகர் ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா, வாட்ச்மேன் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருப்பதும், அதனைத் தொடர்ந்து 100% காதல், காதலிக்க யாருமில்லை, காதலைத் தேடி நித்தியா நந்தா,  சிவப்பு மஞ்சள் பச்சை, அடங்காதே, ஐங்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.