கண் பார்வை தெரியாத தகது தாய் மற்றும் தந்தைக்கு நாளாந்த பணிகளை செய்த நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் 9 பாடங்களில் மாணவியொருவர் “ஏ” தர சித்திகளைப் பெற்றுள்ளார்.  

குறித்த மாணவியின் பெற்றோர்கள் வருமானத்திற்காக ஊதுபத்திகளை விற்று வருகின்றன வருமானத்தில் தான் பிள்ளைகளை பாடசாலைக்கு கல்வி கற்பதற்காக அனுப்பிவைக்கின்றனர். இந்நிலையில் போதியவருமானம் இல்லாமையால் ஏனையோரின் உதவிகளை எதிர்பார்த்து குறித்த குடும்பம் வாழ்கின்றது. 

தாய் மற்றும் தந்தையுடன் இரு பெண் பிள்ளைகள் குறித்த குடும்பத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் 9 பாடங்களில் “ஏ” தர சித்திகளைப் பெற்று சரினி திலினிகா மதுஹஷனி குறித்த குடும்பத்திற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் பிறப்பிலிருந்தே பார்வை அற்றவர்கள் என்பதுடன் குறித்த மாணவின் மூத்த சகோதரி இம் முறை உயர்தர பரீட்சை எழுதவுள்ளார். 

பெற்றோர்கள் கொழும்பிலிருந்து ஊதுபத்திகள் மற்றும் விளக்குத் திரிகளை நகரத்திற்கு கொண்டு சென்று விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் தான் அனைத்துசெலவுகளையும் ஈடுசெய்துகொள்கின்றனர். 

அவர்கள் உணவு உண்ணாவிட்டாலும்  பிள்ளைகள் கல்விகற்று எதிர்காலத்தில் சிறந்ததொரு நிலைக்கு வருவதற்கு பெற்றோர்கள் கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, இரண்டாவது மகள் புலமைப்பரீட்சையில் 182 புள்ளிகளை பெற்று  கேகாலை புனித ஜோசப் மகளிர் பாடலைக்கு செல்கிறார். பிள்ளைகள் படிப்பதற்காக பலர் உதவிசெய்துள்ள நிலையில். எதிர்காலத்திலும்  பல உதவிகளை  செய்வார்கள் என குறித்த குடும்பம் எதிர்பார்க்கின்றது. 

பேராதனிய பல்கலைக்கழகத்திற்கு சென்று உயிரியல் துறையில் கல்விகற்று வைத்தியராகி சேவைசெய்யவுள்ளதாக பரீட்சையில் 9 “ஏ” சித்திகளைப் பெற்ற மாணவி தெரிவித்துள்ளார்.