நடிகை எமி ஜாக்சன் திருமணத்துக்கு முன்பே தாய்மை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், 'மதராச பட்டினம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றதை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகை ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுருந்தனர்.

 இருந்தபோதிலும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ’’தாய்மையடைந்திருக்கிற இந்த தருணத்தை என் வீட்டு மாடியில் நின்று சத்தமாகச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.இந்த உலகத்தில் எதையும் விட, உன் மீதுதான் தூய்மையான, நேர்மையான காதல் உள்ளது. எங்கள் குழந்தையை பார்க்க, காத்திருக்க முடிய வில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், தாயாவது குறித்து ஏமி ஜாக்சன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

கஷ்டம் முதல் 12 வாரங்கள் கஷ்டமாக இருந்தது. ஆனால் நான் கர்ப்பமாக இருப்பதை 6 வாரங்கள் கழித்து தான் கண்டுபிடித்தேன். நான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இலங்கை, இந்தியா, நியூயார்க் என்று பயணம் செய்து கொண்டிருந்தேன். குழந்தை நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட பிறகு சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தேன். இது திட்டமிடப்பட்ட கர்ப்பம் அல்ல. குழந்தை பிறந்த பிறகு அது என்னுடன் சேர்ந்து பயணம் செய்யும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

அம்மா எங்களுக்கு அழகான வீடு உள்ளது. அப்பா, அம்மா ஆக நானும், ஜார்ஜும் தயாராகிவிட்டோம். என் குடும்பத்தார் மிகவும் ஆதரவாக உள்ளனர். நான் கொடுத்து வைத்தவள். தாயாகப் போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கெரியர் குழந்தை பிறந்த பிறகும் நான் நடிப்பில் கவனம் செலுத்துவேன்.எனது கெரியர் மிகவும் முக்கியம். ஆனால் குட்டி பிரேக் எடுத்துவிட்டு தான் நடிப்பை தொடர்வேன். நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த கர்ப்ப காலத்தை பிரேக்காக நினைக்கிறேன்” என கூறியுள்ளார் .