கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் சூதாட்டங்களை ஒழிப்பதற்காக இன்டர்போலுடன் இணைந்து செயற்பட சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக, ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அலெக்ஸ் மார்ஷல், பிரான்ஸில் அமைந்துள்ள இன்டர்போல் தலைமையகத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

கிரிக்கெட்டில் ஊழலை ஒழிப்பதற்காக, பல்வேறு நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. எனினும், இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்புடன் இணைந்து செயல்படும்போது, அதன் 194 உறுப்பு நாடுகளுடனும் ஐ.சி.சி. சிறப்பான உறவைக் கையாள முடியும் என எதிர்பார்பதாக அலெக்ஸ் மார்ஷல் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் சூதாட்ட முறையை ஒழிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக ஐ.சி.சி. தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.