முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் அவரிடம் இன்று நான்காவது நாளகாவும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபராக லெப்டினன் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாரச்சி இருந்த போது, அவர் கடற்படை தலைமையகத்தில் மறைந்திருக்க உதவியமை தொடர்பில் மேலும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுபி பிரிவு கோட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சியின் மனைவி மற்றும் ஆசை நாயகி ஆகியோரிடம் பெற்ற வாக்கு மூலங்கள், தொலைபேசி பகுப்பாய்வு, ஸ்தல பரிசோதனைகளை மையப்படுத்தி இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக, குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவின் சமூக கொள்ளை தொடர்பான விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா இதனை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான மேலதிக செய்திகளுக்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM