திருமணம் என்றாலே பொதுவாக எல்லோரும் அழகாக அடைஅணிந்து திருமண நிகழ்வை முன்னெடுப்பார்கள். ஆனால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பிகினி ஆடை அணிந்து வாகனத்தின் பின்புறத்தில் மணமேடை அமைத்து திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளனர். 

புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த  Ahrielle,  Jeremy Biddle என்ற தம்பதியினர் மீது முழு உலகமே அவதானத்தைச் செலுத்தியுள்ளது. குறித்த தம்பதினர் வித்தியாசமான முறையில் திருமணத்தில் இணைந்துகொண்டுள்ளனர். 

குறித்த மணகள் பிகினி உடையில் தலையில் வேல் வைத்து அலகரிக்கப்பட்ட நிலையில் மணமகன் சாதாரண உடை அணிந்து அலங்கரிக்கப்பட்டு பாதணி அணிந்த நிலையில்  கெப்வாகனத்தின் பின் புறத்தில் திருமணம் செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது. 

சாதாரண முறையில் சடங்கு, சம்பிரதாயம் செய்யப்பட்ட நிலையில் குறித்த திருமண வைபவம் ஒரு மண்டபத்தில் செய்யாமல் வெளிப்புறத்தில் செய்யப்பட்டதால் இசை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அத்தோடு இவர்கள் இருவரும் சதுப்பு நிலத்தில் இறங்கி சேற்றில் வேடிக்கையாக விளையாடியுள்ளனர்.  

இம்மாதம் 10 ஆம் திகதி மணகளுக்கு 40 வயது பூர்த்தியாகவுள்ளதால் தான் இவ்வாறு திருமண வைபவத்தை எடுத்தாகவும், தங்களின் தேனிலவுக்கு அதிகம் செலவழித்தாக தெரிவித்துள்ளனர். குறித்த வீடியோ சமூக இணையத்தளத்தில் பகிரப்பட்ட நிலையில் அதிகமானோரின் வரவேற்பை பெற்றுள்ளது