2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 

கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்தக் குழால் மார்ட்டின் கப்டீல், ஹென்றி நிகோல்ஸ், ரோஸ் டெய்லர், டாம் லாதம், காலின் முன்ரோ, டாம் பிளன்டெல், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன் மற்றும் டிரென்ட் பவுல்ட் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் சோதி, அனுபவம் இல்லாத விக்கெட் காப்பாளர் டாம் பிளன்டெல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளில் நியூசிலாந்து அணிதான் முதலாவதாக வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.