இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 3 பேர் தெலுங்கானா மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ராசாகொண்டா பொலிஸாரால் பெண் ஒருவர் உட்பட மூன்றுபேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 30, 33 , 37 வயதான நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த மூவரும், இலங்கை, எகிப்து, துருக்கி உட்பட மேலும் சில நாடுகளுக்கு மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

20 இலட்சம் ரூபாவில் சிறுநீரகங்களை விற்பனை செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மூன்று சந்தேகநபர்களில் ஒருவர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நோயாளர்களையும் பரிமாற்றுதல் மற்றும் உடல் பாகங்களை விற்பனை செய்தல் உள்ளடங்கலாக சுமார் 40 மனித உடல் பாகங்களை மாற்றும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.