வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக கொக்குவெளியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக மதுவரி திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.அசோக திலகரட்ன தலைமையிலான குழுவினரின் அதிரடி நடவடிக்கையில் இருவரை கைது செய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.