மான்ட்­கார்லோ சர்­வ­தேச டென்னிஸ் போட்­டியில் ஸ்பெய்ன் நாட்டின் ரபேல் நடால் சம்­பியன் பட்­டத்தை வென்றார்.

மான்ட்­கார்லோ மாஸ்டர்ஸ் சர்­வ­தேச டென்னிஸ் போட்டி மொனாக்­கோவில் நடை­பெற்­றது.

இதில் அரை­யி­றுதிப் போட்­டி­களில் ஸ்பெய்ன் நாட்டின் நட்­சத்­திர வீரர் ரபெல் நடால் பிரித்­தா­னி­யாவின் ஆன்டி முர்­ரே­வையும்இ கேல்­மான்பில்ஸ் (பிரான்ஸ்) சக நாட்­டவர் சோங்­கா­வையும் தோற்­க­டித்­தனர்.

இத­னை­ய­டுத்து நடை­பெற்ற இறுதி போட்­டியில் நடால்- கேல் மான்பில்ஸ் மோதினர்.

விறு­வி­றுப்­பாக நடைபெற்ற இந்தப் போட்­டியில் நடால் 7-5, 5-7, 6–-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 9ஆ-வது முறை­யாக இந்த கிண்­ணத்தை தன்­வ­சப்­ப­டுத்­தினார்.

நடாலின் 28ஆ-வது மாஸ்டர்ஸ் பட்டம் இது­வாகும். இதன்­மூலம் அதிகமாஸ்டர்ஸ் பட்­டத்தை வென்ற செர்­பி­யாவின் நோவக் ஜோகோ­விச்சின் (28 பட்டம்) சாதனையை நடால் சமன் செய்துள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.