டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் மேலும் நால்வர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஐவரும் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர்.

ஐவரையும் பொறுப்பேற்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.