ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களை பொலன்னறுவை மறுவாழ்வு மையத்தில் சீர்திருத்தத்துக்காக சேர்க்குமாறு மல்லாகம் நீதி மன்றம் உத்தரவிட்டது.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் சிறப்பு குற்ற தடுப்பு பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தெல்லிப்பழை பொலிஸில் பாரப்படுத்தப்பட்டு மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றில் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் இருவரையும் பொலன்னறுவை கந்தைக்காடு மறுவாழ்வு நிலையத்தில் ஒருவருடம் சீர்திருத்தத் துக்காக அனுப்பி வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.