மட்டக்களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினர் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

அதன் படி 100 அடி நீளமான 149 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன். குறித்த வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் மட்டக்களப்பு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.