ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்கு ஒருவரை, அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தகாத வார்த்தைகளால் திட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளை- நாவலப்பிட்டி, உலப்பனை வீதியின் மரியாவத்தை சந்தியிலிருந்தான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் இடையில் பிக்கு ஒருவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது கோபமடைந்த அமைச்சர் பிக்குவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

தொலைபேசி உரையாடலின் போது அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல வழங்கிய பதிலால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ள அமைச்சர் கிரியெல்ல,

குறித்த வீதிக்கு தாம் ஏற்கனவே 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கியதாகவும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்க எவரும் இருக்காததால், அதனை செய்ய முடியாமற்போனது.

எனினும் ஆர்ப்பாட்டத்தின் போது தன்னுடன் தொலைபேசியில் உரையாற்றிய நபர் தேரர் என தனக்குத் தெரியாததால், அவர் தன்னைத் திட்டியதால் தானும் பதிலுக்கு திட்டியதாக அமைச்சர் விளக்கமளித்தார்.