கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவும் - நியூஸிலாந்தும் மோதுகின்றன.

இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்தும் அதில் பயன்படுத்தப்படவுள்ள பிங்க் நிற பந்துகுறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதில் பல வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, பகலிரவு டெஸ்ட் போட்டியும் அதில் பயன்படுத்தப்படவிருக்கின்ற பிங்க் நிற பந்துகுறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் இது ஆரோக்கியமான விடயமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை பாரம்பரியம் மிக்க டெஸ்ட் போட்டிக்கு இது ஏதுவாக அமையாது என்றும் மஹேல குறிப்பிட்டுள்ளார்.

149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல, இந்த மாற்றங்களுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். முக்கியமாக அந்த பிங்க் நிற பந்தையும் தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.