5 வருடங்கள் பின்னர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட வாகனச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸாரால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு குற்றப்பத்திரம் வாசித்த போது குறித்த நபர் குற்றவாளியெனத் தெரிவித்ததால் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சாரதி குற்றத்தை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது .