(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலே தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கின்றது என ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அத்துடன் பெருந்தோட்டங்களுக்கும் சிறுதோட்ட மக்களுக்கு  இருக்கும் உரிமையை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பட்டார்.

பெருந்தோட்டம் என்றும் தோட்டத்தொழிலாளி என்று இருக்கும் பெயர் மாற்றப்பட்டு அவர்களுக்கு தோட்டங்களில் காணிகள் பிரித்து வழங்கி அதனை நிர்வகிக்க வழியமைத்தால் மாத்திரமதான் இந்த தேயிலை தொழிற்துறையை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அத்துடன் பெருந்தோட்ட பாடசாலைகளில் இருக்கும் பதில் அதிபர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.