(ஆர்.விதுஷா)

நவகமுவ - கடுவெல - கொத்தலாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

கொத்தவாவல பகுதியிலுள்ள எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில்  நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்த கொள்ளை சம்பவம்  இடம்பெற்றுள்ளது.  

மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த இருவர்   வான்னோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு ஊழியர்களை  அச்சுறுத்தி 30 ஆயிரம்  ரூபா பணத்தை  கொள்ளையிட்டு  சென்றுள்ளனர்.  

சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகளை நவகமுவ பொலிசார்  மேற்கொண்டுவருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.