சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 200 பேர் வழிதவறியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தாண்டின் பின்னரான காலப் பகுதியில் மாத்திரம் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைத் தந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் வழியாக மலை ஏறியவர்கள் வழி தவறி இரத்தினபுரி வழியாக இறங்கிய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளது.

இவ்வாறு வழி தவறியவர்களில் அதிகளவான சிறுவர்களும் முதியவர்களும் அடங்கியுள்ளனர்.

அதிக சன நெரிசல் காரணமாகவே இவர்கள் வழி தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை பொலிஸார் மீட்டு குடும்ப உறவினர்களுடன் சேர்த்து வைத்துள்ளனர்.

யாத்திரை மேற்கொள்ளும் பொழுது முதியோர் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்கும் படி நல்லத்தண்ணி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)