இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி சாரதி அவரது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்திருந்த நிலையில் வீதியின் ஓரத்தில் சிறுமி ஆடைகள் களையப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

மேலும், அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. வைத்திய பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளமையானது, பெற்றோருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்த சம்பவம் குறித்து சிறுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் அங்கிருந்து கோயிலுக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி என்னிடம் பேசினார்.

அவர் ஆறுதலா பேசியதையடுத்து அவரிடம் நடந்தவற்றை கூறினேன். அவரும் என்னை கோயிலுக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு எனக்கு குளிர்பானம் வாங்கிகொடுத்தார்.

அடுத்து என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

மயக்க மருந்து கொடுத்து கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த முச்சக்கரவண்டி சாரதிகள் தேவா, ராஜா, தினேஷ் ஆகியோர் என தெரியவந்ததையடுத்து, ராஜா மற்றும் தேவா கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள தினேஷை பொலிசார் தேடி வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த, சிறுமியை காஞ்சிபுரம் ராஜாஜி சந்தைத்தொகுதி பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றதை இவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

கைதானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து, தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.