(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்படுகின்ற மின்வெட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றது.

இதற்கான பிரதிபலனை எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். 

நாட்டில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள வரட்சின் காரணமாகவே மின்னுற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. 

எனினும் அரச நிறுவனமொன்றான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சாரசபை மீது தொடுத்துள்ள வழக்கிற்கமைய, எதிர்வரும் 9 ஆம் திகதி மின்சார சபை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளமை இது பொய் என்பதை தெளிவுபடுத்துகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.