கதிர்காமத்தில் அமைந்துள்ள புகையிரத திணைக்கள ஓய்வகத்தின் முகாமையாளர் மற்றும் ஓய்வக ஊழியர் ஆகிய இருவரும் கதிர்காமம் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.

சிறுவர்கள் இருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே மேற்படி இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிசார் மேற்படி ஓய்வகத்தை முற்றுகையிட்டு முகாமையாளரையும்  ஊழியர் ஒருவரையும் கைது செய்துள்ளதுடன் ஓய்வகத்தில் தேடுதலை மேற்கொண்ட போது பூட்டிய அறையொன்றில் தடுத்து வைத்திருந்த இரு சிறுவர்களையும் மீட்டனர். 

மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் வைத்திய பரிசோதனைக்கென்று கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று கதிர்காமம் பொலிசார் தெரிவித்தனர்.