இந்தியா, சேலம் மாவட்டத்தில் அண்ணன் கண் முன்னே தங்கை விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சையது ரஃபிக் ஜக்ரியா என்பர் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஊரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து சந்தோஷமாக  ஊருக்கு வந்திருந்துள்ளார் சையது.

இதற்கிடையில் இவரின் இளைய மகள் ஆயிஷா சுஹைனா, வழக்கம் போல தனது சகோதரருடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை நுழைவு வாயிலில் இருந்து மாணவி ஆயிஷா வகுப்பறை மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பாடசாலையின் பேருந்து பின் நோக்கி வந்து ஆயிஷாவின் மீது மோதியது.

இதில் பேருந்தின் பின்புற சில்லில் சிக்கிக்கொண்ட சிறுமி சுஹைனா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தனது அண்ணன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், வழக்கு பதிவு செய்து ஓட்டுநரிடமும் பாடசாலை நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்ஈ, சிறுமி சுஹைனாவின், பிரிவு குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.